"மன நொய்மை' எனும் சொல் அதிகமாகப் புழக்கத்தில் இல்லாதது.

உறுதியின்மை, இழிவு, வருத்தம், மனம் நொறுங்கிப்போவது, மனவுறுதியற்றுப் போவது, மனம் குலைதல்(get greatly upset), மனம் பொடியாகிப் போவது போன்றவற்றை இச்சொல் குறிக்கும்.

Advertisment

இத்தகைய நிலையை எல்லா மனிதர்களும் வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்திருப் பார்கள்.

மனம், புத்தி என்பதை ஜோதிடம் சந் திரனைக்கொண்டே விளக்குகிறது. சந்திரனே மனதுக்குக் காரகர்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் அசுப நிலையிலிருந்தால், அவரது தசாபுக்திக் காலங்களில் மன நொய்மையைக் கொடுப்பார்.

சந்திரனின் அசுப அமைப்புகள்

Advertisment

1. சந்திரனுக்கு இருபுறமும் கிரகங்கள் இல்லாமல், சந்திரன் கேமத்துருவ யோகம் எனும் நிலை பெறுவது.

2. சந்திரனுக்கு இருபுறமும் கிரகங்கள் இல்லாமல் கேமத்துருவ நிலை பெற்று, அவருடன் ராகு இருப்பது.

3. சந்திரன் விருச்சிகத்தில் நீசம்பெற்று, நீசபங்கம் பெறாமலிருப்பது.

4. சந்திரன் ராசி, அம்சம் இரண்டிலும் நீசம்பெற்று, நீச வர்க்கோத்தம நிலை பெறுவது.

5. சந்திரன், சனி சேர்க்கை.

6. லக்னத்துக்கு 6, 8, 12-ல் சந்திரன் மறைவது.

7. சந்திரன் சகட யோகம் எனும் அமைப்பில்- குரு, சந்திரன் 6, 8-ல் அமைவது.

8. சந்திரன், சுக்கிரன், சனி சேர்க்கை.

Advertisment

9. காலபுருஷனின் பாதகாதிபதி சனியும், காலபுருஷனின் அஷ்டமாதிபதி செவ்வாயும், சந்திரனும், ராகுவும் கூடி நிற்பது.

10. தேய்பிறைச் சந்திரனுடன் சனி அல்லது ராகு சேர்ந்து 12-ல் நிற்பது.

இவையெல்லாம் மன நொய்மையைத் தரும் அமைப்புகள்.

மன நொய்மை பற்றிய விளக்கம்

பாரதப் போர் தொடங்கும் நேரம். பாண்டவர், கௌரவப் படைகள் எதிரெதிரே நிற்கின்றன. கிருஷ்ணன் சாரதியாகத் தேரோட்ட, அர்ஜுனன் தேரில் நின்று படையைப் பார்க்கிறான்.

தான் போரிடப்போகும் படையில், அனைவரும் தனது ரத்த சொந்தங்கள். மேலும் தனது பாட்டனாரும் நிற்பதைக் கண்டவுடன் மனம் பேதலித்து, மனம் நொய்மையடைந்து, தனது வில்லைக் கீழே போட்டுவிட்டு தேரில் அப்படியே அமர்ந்துவிட்டானாம். அவனது மன நொய்மையைப் போக்கவே கிருஷ்ணர் அவனுக்கு மீண்டும் மீண்டும் அறிவுரை கூறி, அவன் மனம் தெளிவடையச் செய்தார். அந்த போர்க்கள அறிவுரைகளே பகவத்கீதை என போற்றப்படுகிறது.

இனி, 12 பாவங்கள் ஏற்படுத்தும் மன நொய்மையைக் காணலாம்.

லக்னம்

aa

லக்னத்தில் நீசச் சந்திரன் அல்லது அசுப நிலைச் சந்திரன் இருப்பின், லக்னமும் ராசியுமே நொய்மையடைந்துவிடும்.

இதனால் இந்த ஜாதகர்கள் எப்போதும் ஆளுமைத்தன்மை யற்றவராக, ஒருவித இறுக்க மாகவே காணப்படுவர். காது கேட்கும் திறன் குறைந்தோ பேச்சில் குறைபாடோ இருக்கும். எப்போதும் ஆரோக்கியக்குறைவுடன் இருப்பர். சிலர் மனக் குழப்பம் உடையவராகவும், சிலர் முட்டாளாகவும் இருப்பர்.

இதனால் இவர்கள் சந்திர தசைதான் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதுமே மன நொய்மையுடன் வாழ்வார்கள். "யாருமே தன்னை மதிக்க வில்லை. தான் எதற்கும் லாயக் கில்லாதவன்' என்ற மிகத் தாழ்வு மனப்பான்மை கொண்டு, மன நொய்மையுடன் வாழ்வினை நடத்திச்செல்வர்.

இவர்கள் அம்பாள் சந்நிதியில் உழவாரப்பணி மற்றும் சிறுசிறு உதவிகள் செய்வதும், குளம், ஏரிகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவதும் மன நொய்மை குறைய உதவிசெய்யும். திருக்கடையூர் அபிராமியம்மனை தரிசிக்கவும்.

2-ஆமிடம் ஜாதகத்தில் 2-ஆமிடத்தில் சந்திரன் அசுபத்தன்மையுடன் இருந்தால், அதன் தசாபுக்திக் காலங்களில் பொருளாதார நிலை மண்டைகாய வைத்து விடும். குடும்பத்தின் சில நிகழ்வுகள் இவர்களைச் சிதறடித்து மன நொய்மை ஏற்படும். இவர்கள் பேசிய பேச்சுகளும், பேசாத சொற்களும் திரித்துக் கூறப்பட்டு, மனம் நொந்துவிடு வார்கள். 2-ஆமிடம் மாரகஸ்தானம். இவர்களுக்கோ, இவர்களது குடும்பத்திலோ மாரகத்துக்கு ஒப்பான கண்டம் ஏற்பட்டு, துடிதுடித்துப் போய்விடுவார்கள்.

இதனை சந்திரனின் சாரநாதரைக் கொண்டு சரியாகக் கணக்கிடவேண்டும்.

இக்காலகட்டத்தில் அன்னதானமே மிகச்சிறந்த பரிகாரமாகும். "அட, பர்ஸில் பைசா இல்லை. எங்கிருந்து அன்னதானம் செய்வது' எனில், அன்னதானம் நடக் குமிடத்தில் அரிசி களைந்துகொடுப்பது, காய் திருத்திக் கொடுப்பது, பாத்திரம் கழுவிக்கொடுப்பது, சுத்தமாகப் பெருக்கிக் கொடுப்பது என இன்னபிற வேலைகளைச் செய்யலாம். காஞ்சி காமாட்சியம்மனை வணங்கவும்.

3-ஆம் பாவம்

3-ஆமிடத்தில் பலமற்ற சந்திரன் இருந்து அவரின் தசை நடந்தால், ஜாதகரின் உறவினர்கள், உடன்பிறந் தோர், சுற்றியுள்ளவர்கள், நண்பர்களால் அபவாதம், பழி, நம்பமுடியாத வதந்தி, கோள் சொல்லப்பட்டு, அதனை நம்பமுடியாமல் மனம் அதிர்ந்துவிடுவார்கள். வீண்பழியைத் தகர்க்க இயலாமல் தவித்துவிடுவார்கள். வேறுசிலருக்கு இளைய சகோதரியால் தீரா அவமானம் ஏற்படும்.

இவ்வாறு வீண் வம்பில் அகப்பட்டுக் கொண்டவர்கள் சென்னை அருகேயுள்ள திருவாலங்காடு சென்று சிவனையும்,

அம்பாளையும் வணங்கவேண்டும். பக்திப் புத்தகம் விநியோகமும் நன்று.

4-ஆமிடம்

ஜாதகத்தில் 4-ஆமிடத்தில் அசுபச் சந்திரன் இருந்து, அவரின் தசாபுக்தி நடந்தால், வீட்டிற்குள் தண்ணீர் வந்து, கூடவே சாக்கடையும் நிரம்பி, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடும்.

அல்லது வீட்டை விற்று வெளியேறக்கூடும்.

பள்ளிக்குழந்தைகள் பள்ளியைவிட்டு விலக நேரிடும். விவசாய நிலம் தண்ணீர் நிரம்பி பயிர்கள் அழுகலாம் அல்லது தண்ணீரின்றி வாடலாம். 4-ஆமிடம் என்பது காலபுருஷ தத்துவத்தில் சந்திரனின் வீடு. எனவே இதே 4-ஆமிடத்தில் சந்திரனின் பலவீனம், ஜாதகரின் வாழ்வை அதிகமாக பாதித்துவிடும்.

இவர்கள் பூமீஸ்வரரை வழிபடலாம். சிறுவாபுரி முருகனை, பாலசுப்பிரமணியரை வழிபடலாம்.

5-ஆமிடம்

5-ஆமிடக் குறைபாடுள்ள சந்திரன், தனது தசாகாலத்தில் ஜாதகரின் சந்ததிகளின்மூலம் மனம் நோகச்செய்வார். பங்கு விற்பனை, லாட்டரிமூலம் மனம்பதறச் செய்துவிடுவார். காதல் விஷயங்களைக் கொண்டு கதறடிப்பார். கலையுலகில் உள்ளோர், இம்மாதிரி தசாகாலங்களில் மிக மன நொய்மையடைவர். இந்த தசாகாலத்திலுள்ள கர்ப்ப ஸ்திரிகள் மிக கவனமாக நடந்துகொள்ள வேண்டும். ஒருசிலருக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை ஏற்படும்.

கர்ப்பமடைந்த பெண்கள் திருக்கருகாவூர் சென்று வழிபடுவது நன்று. மனநோய் ஏற்படும் அறிகுறிகள் தெரிந்தால், திருச்சி அருகே குணசீலம் மற்றும் சோட்டாணிக்கரை பகவதி அம்மனை வணங்கவும். அருகிலுள்ள அம்பாள் சந்நிதியில் விளக்கேற்றவும். நல்ல நெய்யூற்றி, பஞ்சுத்திரியினால் ஏற்றவேண்டும்.

6-ஆமிடம்

ஜாதகத்தில் 6-ஆமிடத்தில் அசுபச் சந்திரன் சம்பந்தமிருந்தால், அதன் தசாகாலத்தில், சாரநாதரைப் பொருத்து, இவர்கள் நினைத்தே பார்த்திராத நோய்த்தாக்கம் ஏற்பட்டு, மனம் குறுகிவிடுவார்கள். இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படும் சோகம் ஏற்படும் அல்லது சிறைச்சாலைக்குச் செல்லும் துர்பாக்கியம் ஏற்பட்டு, தனிமையில் துன்பம் காண்பார்கள். சிலர் வீட்டில் திருட்டு நடந்து, மனம் அதிர்ந்துவிடுவார்கள். இந்த தசாகாலத்தில் எதிரிகள் இவர்களைப் பந்தாடிவிடுவார்கள். சிலர் வாங்கிய கொஞ்ச கடன் குட்டிபோட்டு, "மீட்டர்' போட்டு, "ஹவர்' வட்டி போட்டு மீண்டும் மீண்டும் பெருகித் தள்ளும். இதனால் ஏற்படும் மன நொய்மை நிலை சொல்லிமாளாது. 6-ஆமிட அசுபச் சந்திரன் இவர்களை பைத்தியம் பிடித்துத் தலைசுற்றுமளவுக்கு பாடாய்ப்படுத்திவிடுவார்.

கடன் பிரச்சினை தீர திருவாரூர் ரிணவிமோசனர் மற்றும் திருச்சேறை ரிணவிமோசனரை வழிபடவும். நோய்த்தாக்கம் தீர தன்வந்திரி பகவானை வழிபடவும். 6-ஆமிட அசுபச் சந்திரனால் ஏற்படும் மனஇருள் நீங்க, பௌர்ணமியன்று அம்பாளுக்கு விரதமிருந்து, மாலையில் அவளை தரிசித்து, பின் பூரண நிலவையும் கண்டு வணங்கவும். 6-ஆமிடம் என்பது ஏற்கெனவே சற்று தொல்லை தரும் இடம். அதில், பாவகிரகம் பலவீனமாக இருந்தால் 6-ஆமிட அசுபப்பலன் குறையும். மாறாக சந்திரன் அசுபத்தன்மை பெற்று அமரும்போது, கண்டிப்பாக அம்பாளின் அனுக்கிரகம் அவசியம்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 94449 61845